மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள்(2020) என்ன சொல்கிறது ?(what say agricultural law told us?)
.............இதை பலரிடம் கொண்டு போய் சேர்த்து விவசாயிகளுக்கு ஆதரவு தாருங்கள்...............
சட்டங்கள்
- (1) விவசாயிகள் தங்கள் விளைவிக்க கூடிய தானியங்களின் விலையை விவசாயிகளே நிர்ணயிக்கலாம்
பாதிப்பு :
விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பை விவசாயிகளிடம் இருந்து தட்டி பறிக்கிறது .
- (2) ஒரு மாநிலதில் உள்ள விவசாயி(அதாவது ஒரு பெரிய அளவில் சாகுபடி செய்யும் விவசாயி ,அதிக தானியங்களை உற்பத்தி செய்பவர்)இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் சென்று தன விளைவித்த அதிகப்படியான பொருட்களை விற்பனை செய்யலாம் என்று சந்தை சுதந்திரம் வழங்குகிறது மத்திய அரசு .சில விவசாயிகள் ஒரு மாநிலத்தின் பொருட்களின் தேவைகளை அறிந்து அங்கு சென்று விற்று லாபம் பெறுகின்றனர் .இதனால் அவர் அதிகப்படியான லாபம் ஈட்டலாம் .
பாதிப்பு :
இதன் மூலம் பெரு விவசாயிகள் தங்கள் விளைவித்த தானியங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமத்தி செய்து கொள்ள முடியும் .
சிறு ,குறு விவசாயிகள் :
அனால் விளைச்சலில் குறைந்த அளவு தானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளின் தானியங்களை வெளி மாநிலங்களுக்கு
எடுத்துச்சென்று விற்பனை செய்ய முடியாது .
மாறாக அந்தந்த மாநிலத்திற்குள் உள்ள விசாயிகள் அந்தந்த மாநிலத்திற்குள் உள்ள சந்தைகளில் மட்டும்தான் விற்பனை செய்ய முடியும் . அந்த மாநிலத்தில் சந்தைகள் தானியங்களின் விலையை நிர்ணயிக்கும் விலையில் மட்டுமே விவசாயிகள் தங்கள் விளைவித்த பொருட்களை விற்க முடியும் .
அது லாபமாக இருந்தாலும் நட்டமாக இருந்தாலும் அங்கு சந்தைக்காரர்கள் வைக்கும் நிர்ணய விலையில் தங்கள் தனியா மூட்டைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் . இதனால் சிறு,குறு விவசாயிகள் வேறு வழி இல்லாமல் சரியான விலை இல்லாமல் நட்டத்தை சந்திக்க நேரிடும் .
- (3) விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவங்களுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்துகொண்டு விளைவித்த பொருட்களை நேரடியாகவே விற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பாதிப்பு :
ஆனால் இந்த வகையான கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தமிட்டபடி விவசாயிகளிடம் நடந்துகொள்ளாத பட்சத்தில் . ஒரு சாதாரண ஏழை சாமானியர்கள் இதற்க்கு எதிராக போராடி நீதி பெற இயலுமா? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது .
(அத்யாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020),
அமலில் உள்ளது :
வெங்காயம் உள்ளிட்ட அத்யாவசிய உணவு பொருட்களை ஒரு அளவுக்கு மேல் அதிகப்படியான அளவு சேமித்து வைக்க கூடாது என்று இருந்தது .
அமலில் உள்ளதன் நன்மை :
இந்த சட்டத்தின் மூலம் விவசயிகளிடம் இருந்து வரும் பொருட்கள் சந்தைகளில் அதிகபடியாக சேமித்து வைக்காமல் குறிப்பிட்ட நாட்களுக்குள்ளயே விற்பனை செய்யப்படும் .
திருத்தச்சட்டம் (2020)
அமலில் வரப்போவது :
வெங்காயம் உள்ளிட்ட அத்யாவசிய உணவு பொருட்களை ஒரு அளவுக்கு மேல் அதிகப்படியான அளவு சேமித்து வைக்க கூடாது என்று இருந்ததை மாற்றி இந்த வகையான பொருட்களை குறிப்பிட்ட அதிகப்படியான அளவிற்கு சேமித்து வைக்கலாம் என்று திறுத்தப்பட்டுள்ளது .
தீமைகள் :
இந்த வகையான சட்டம் வந்தால் கார்ப்ரேட் நிறுவனங்கள் மக்களிடம் இருந்து வாங்கி இதை அதிக அளவில் வாங்கி வைத்து கொள்வார்கள் (பதுக்கி வைத்துக்கொள்வார்கள் ) .இதனால் இந்த பொருட்களின் விலை உயரும் போது இந்த பொருட்களை இவர்கள் அதிகப்படியான விலை நிர்ணயம் செய்து மக்களிடமே விற்பார்கள் .இதன் மூலம் மக்கள் பொருட்களை வாங்கி மேலும் மேலும் நட்டத்தை சந்திக்க நேரிடும் .
உள்மாநில சந்தைகள் பாதிக்கப்படும் :
பெரு விவசாயிகள் தானியங்களை வெளி மாநிலங்களுக்கு சென்று விற்பதால் உள்மாநில சந்தைகளின் பாரம்பரியம் கெட்டு போகும். மேலும் இதன் மூலம் லாபம் மாநில சந்தைதாரர்களுக்கு செல்லாது கார்ப்பரேட்காரர்களிடம் சென்றுவிடும் .
மாநில அரசிலிருந்து மத்திய அரசு :
இப்படி விவசாயிகள் தங்கள் விளைவித்த பொருட்களை வெளி மாநிலங்களுக்கு சென்று விற்பதால் உரிமைகள் மற்றும் இதன் மீதான கட்டுப்பாடுகள் மாநில அரசிடமிருந்து பறிக்கப்பட்டு மத்திய அரசிடம் போய்விடும் .
இதன் நன்மைகள் :
நன்மைகள் என்று சொல்ல எதுவும் இல்லை.
இதுதான் இந்த வேளாண்(2020) சட்ட திருத்தத்தின் பாதிப்புகள் ....................
விவசாயியின் இரக்கம் :
லட்சக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .இதில் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர் .மேலும் டெல்லி யை நோக்கி தினம்தோறும் வாகனங்களில் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.இவர்கள் உணவு சமைத்து சாப்பிடும் போது அருகில் இருந்த காவலர்களுக்கும் உணவளித்தனர்
26.01.2021 :
அனால் இன்று போராட்டம் வன்முறையாக மாறி சில விவசாயிகள் காவலாளிகளால் அடிக்கப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
............படித்ததற்கு நன்றி, பிடித்திருந்தால் பகிருங்கள் !............
If you like this page ,copy This Link Share on your Social Media pages help us to know this article about Agricultural Laws
- https://mrblackblogging.blogspot.com/2021/01/what-say-agricultural-laws.html