தமிழக அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மாதம்தோறும் இலவச ஊக்கத்தொகை
தமிழக அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மாதம்தோறும் இலவச ஊக்கத்தொகை !

தமிழக அரசு அறிவிப்பு :
அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மற்ற திட்டங்களில் உதவித்தொகை பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என சமூக நலத்துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் கல்வி திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.
சென்னை:
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகள் ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். சான்றிதழ் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், இளங்கலை பட்டங்கள், தொழில்முறை மற்றும் பாராமெடிக்கல் படிப்புகள் மற்றும் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை உள்ளவர்கள் தகுதியுடையவர்கள். மற்ற திட்டங்களில் உதவித்தொகை பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என சமூக நலத்துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி வரம்பு :
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் 9-12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகளிள் படித்தவர்களும் இத்திட்டத்தில் பயனடைய தகுதியுடையவர்கள் ஆவர்.
கல்லாறு மறுவாழ்வுப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்ட/மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஊனமுற்றோர் நலன், வனத்துறை மற்றும் சமூக நலத் துறை பள்ளிகள் தகுதியானவை. 8,10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குப் பிறகு முதல் முறையாக கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். கடிதப் பரிமாற்றம் மற்றும் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவிகள் இத்திட்டத்தில் பயனடைய தகுதியுடையவர்கள் ஆவர்.
சான்றிதழ் படிப்புகள், டிப்ளமோக்கள், இளங்கலை பட்டங்கள், தொழில்முறை படிப்புகள் ஆகியவற்றைப் படிப்பவர்களும் தகுதியானவர்கள்.
எப்படி விண்ணப்பிப்பது ?
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அறிவித்துள்ள இத்திட்டத்தில் மாணவிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். https://penkalvi. tn.gov.in. என்ற இணையதளம் மூலம் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகள் மாதந்தோறும் ரூ. 1000 ஊக்கத்தொகை
வழங்கும்திட்டம் தொடர்பான விவரங்களை 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டுதெரிந்து கொள்ளலாம்