12th result in 2021 check online !

                                                 12th result in 2021 check online 

           மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு 2020-21 தேர்வு முடிவுகள் வெளியீடு,

           கொரோனா பெரும்  தொற்றின் காரணமாக 2020-21 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன நிலையில்  மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை அளித்துள்ளது.

  •             10 மற்றும் 11 வகுப்பு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன, 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 12 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களை கீழ்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.


மதிப்பெண் வழங்கும்  முறை  :


வ.எண்தேர்வுவிகிதம்
1பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
(உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்கள் உடைய சராசரி)
50%
2பதினோராம் வகுப்பு பொது தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை(written) மதிப்பெண்கள் மட்டும்)20%
3பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு (practical)அகமதிப்பீடு (internal)30%


  •      12ஆம்  வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும்  செய்முறைத்தேர்வு 20 மற்றும் அக மதிப்பீட்டில் 10 என மொத்தம் 30   க்கு பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
  •       கொரோனா பெரும் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பன்னிரண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்கு பெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
  •         11 ஆம்  வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் இரண்டிலும் பங்கு பெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10 ஆம்  வகுப்பு மற்றும் 11 ஆம்  வகுப்பு எழுத்து தேர்வுகளின் அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
  •          கடந்த ஆண்டு 11 ஆம்  வகுப்பு இறுதித்தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலும் தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தால் மாணவர்களுக்கு தற்போது அதை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும். 

தேர்வு முடிவுகள் வெளியீடு:

         மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு 2020-21 தேர்வு முடிவுகள் வெளியீடு,

           2020-2021 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் 19.07.2021 அன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை கீழ் குறிப்பிட்ட இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

HSE(+2) 2020-2021 Results expected on 19th July 2021 @ 11:00 A.M. 

          NO             Websites
                 1 portal 1
                 2 portal 2
                 3 portal 3
                 4 portal 4

குறுஞ்செய்தி :
  •         மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி ஆகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
        மேலும் பள்ளி மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை 22.07.2021 அன்று காலை 11 மணி முதல் 


  என்ற இணையதளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தளங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url