வடக்கு சென்டினல் தீவு💀 - North sentinel Island
வடக்கு சென்டினல் தீவு
வடக்கு சென்டினல் தீவு (North Sentinel Island) வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். இது தெற்கு அந்தமான் தீவின் தெற்குப் பகுதியின் மேற்கே அமைந்துள்ளது. இத்தீவின் பெரும்பாலான பகுதி காடுகளைக் கொண்டுள்ளது. அந்தமானின் மக்கள் குடியிருப்புகளில் இருந்து தொலைவில் அமைந்துள்ள இத்தீவு பவளப் பாறைகளால் சூழப்பட்டுள்ளது. இத்தீவில் இயற்கைத் துறைமுகங்கள் எதுவும் இல்லை.
வடக்கு சென்டினல் தீவில் கிட்டத்தட்ட 50 முதல் 400 வரையிலான சென்டினலீசு என அழைக்கப்படும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.வெளியுலகத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாது இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.தொற்றுநோய்களாலும், வன்முறைகளாலும் மக்கள்தொகை இங்கு பெருகி வருகிறது. இதனால், இம்முழுத் தீவையும், அதனைச் சுற்றி மூன்று மைல் சுற்றளவு கடற்பகுதியையும் இந்திய அரசு தவிர்ப்பு வலயமாக அறிவித்துள்ளது.
அண்மைக்கால வரலாறு:
சென்டினலீசு மக்களுடன் நட்புறவையே வைத்திருக்க வேண்டும் என்ற கட்டளையுடன் இந்திய ஆய்வுக்குழுக்கள் 1967 ஆம் ஆண்டு முதல் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தீவுக்குச் சென்று வந்துள்ளனர். 1975 இல், அந்தமானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பெல்ஜியம் மன்னர் மூன்றாம் லியோபால்டு இத்தீவின் கரையில் ஓரிரவு கப்பலில் தங்கியிருந்தார். எம்வி ருசுலி, எம்வி பிரிம்ரோசு என்ற இரு சரக்குக் கப்பல்கள் முறையே 1977, 1981 இல் இங்கு தரைதட்டின. உள்ளூர் சென்டினலீசு மக்கள் இக்கப்பல் சிதைவுகளில் இருந்து இரும்பு எடுத்த்ச் சென்றதாகக் கூறப்படுகிறது. 1991 இல், இக்கப்பல்களின் சிதைவுகளை அகற்றுவதற்கு மீட்புக் குழுக்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டது.
சென்டினலீசு மக்களுடனான முதலாவது அமைதியான தொடர்பு இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த திரிலோகிநாத் பண்டிட் மற்றும் அவரது குழுவினரால் 1991 சனவரி 4 இல் நிகழ்த்தப்பட்டது. 1997 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியர்கள் எவரும் அங்கு செல்லவில்லை.
சென்டினலீசு மக்கள் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தின் தாக்கத்தில் தப்பிப் பிழைத்தனர். ஆழிப்பேரலை இடம்பெற்ற மூன்று நாட்களின் பின்னர் தீவின் மேலால் சென்ற இந்திய உலங்குவானூர்தி மக்கள் அம்புகளையும், கறளையும் வானூர்தியை நோக்கி எறிவதை கவனித்தனர்.
2006 ஜனவரி 26 அன்று மீன்பிடிப் படகு ஒன்று தீவின் பக்கம் ஒதுங்கியதில், இரண்டு மீனவர்கள் உள்ளூர் மக்களால் கொல்லப்பட்டனர்.
2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று சில மீனவர்களின் உதவியுடன் இங்கு சென்ற அமெரிக்கரான ஜான் ஆலன் சாவ் என்பவர் மாயமானார். அவரின் நிலைமை என்ன ஆனது என்ற விடை இன்னமும் கிடைக்கவில்லை.
SOCIAL MEDIA

